• நோய் நாடி..! - முதுகுவலி... மீள வழி!


  நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப்பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். அந்த வகையில் தொடர்ந்து நோய்களைப் பற்றி வெளிச்சம் தந்துவரும் ‘நோய் நாடி’ பகுதியில், பலரையும் வாட்டிவதைக்கும் முதுகுவலி பற்றிய மருத்துவத் தகவல்களை விரிவாகப் பேசுகிறார்... காரைக்குடி, காவேரி மருத்துவமனையின் எலும்பு, மூட்டு நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் மு.சலீம். 

  ‘‘முதுகுவலி ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் நிச்சயம் வந்தே தீரும். ஆனாலும், அது ஏற்படுவதற்கான காரணம் பற்றியோ, அதற்கான தீர்வு பற்றியோ பெரும் பாலானவர்கள் அறியாமல் இருப்பதுடன், முதுகுவலி விஷயத்தில் தொடர்ந்து பல தவறுகளையும் செய்துவருவது வேதனையான விஷயம்’’ என்ற டாக்டர், தொடர்ந்து விளக்கமாகப் பேசினார்... 

  முதுகு வலி ஏன் ஏற்படுகிறது?

  ‘‘கழுத்து முதல் இடுப்பு வரை உள்ள தண்டுவட எலும்புகள், அதைச் சுற்றியுள்ள தசைகள், தசை நார்கள் மற்றும் அதன் உள்ளே இருக்கும் நரம்புகளின் பாதிப்புகளினால் ஏற்படக்கூடிய வலிதான், முதுகுவலி. கழுத்தில் உள்ள 7 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப்பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும்புகள்... இவை அனைத்தும் இணைந்ததே முதுகுத் தண்டுவடம். இது தவிர, தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் சில நரம்புகள் மூளையின் தொடர்ச்சியாகவும், சில நரம்புகள் கை, கால் நரம்புகளுடன் இணைக்கப்பட்டும் இருக்கும். இதில் ஏதேனும் சிறு பிரச்னைகள் தொடங்கி பெரிய பிரச்னைகள் வரை ஏற்படுவதன் காரணத்தால், முதுகுவலி ஏற்படும்.  

  தண்டுவடத்தில் பிரச்னை ஏற்படக் காரணங்கள் என்ன?  
  போதிய உடற்பயிற்சி இல்லாமை, அதிக அயர்ச்சி (ஸ்ட்ரெயின்), அதிக வேலை, அதீத உடற்பயிற்சி, அதீத விளையாட்டு, அடிபடுவது, கிருமிகளின் தாக்குதல், புற்றுநோய் பாதிப்பு, அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலைசெய்வது, தவறான முறையில் பளு தூக்குவது, எலும்புத் தேய்மானம், எலும்பு பலவீனம் போன்றவற்றை தண்டுவடத்தில் பிரச்னைகள் ஏற்படுத்துவதற்கும், அதனால் முதுகு வலி உண்டாவதற்குமான பொதுக்காரணங்களாகச் சொல்லலாம். பெண்களைப் பொறுத்தவரையில் கர்ப்பப்பை, நீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் கிருமித்தொற்று, குடல்நோய் பாதிப்பு மற்றும் மெனோபாஸ் கட்டத்தை தாண்டிய பெண்களுக்கு ஏற்படக்கூடிய கால்சியம் சத்து குறைபாடு போன்றவற்றாலும் முதுகுவலி வரலாம். முதுகுத் தண்டுவடத்தில் உள்ள எலும்புகள், நரம்புகள் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து முதுகுவலி பிரச்னையின் தாக்கம் அமையும்.

  அறிகுறிகள் என்னென்ன? 

   தினசரி நடவடிக்கையால் அதிக வலி  

   தசைப்பிடிப்பு

   அன்றாட வேலைகளைச் செய்வதில் சிக்கல்

   நடக்க முடியாமல் போவது

   உட்கார்ந்து எழுவதில் சிரமம்

   கை, கால் பலவீனம் அடைவது

   தொடர்ந்து வேலை செய்வதில் சிக்கல்

   சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மற்றும் பல. 

  ஆரம்பத்தில் சரிசெய்யாவிட்டால்... 

  முதுகுவலி என்பது முதுகில் ஏற்படும் வலி என்பதுடன் நின்றுவிடாது. கவனிக்காமல் விட்டால், சிலருக்கு முதுகுவலியுடன் கூடிய கால்வலி வரக்கூடும். சிலருக்கு இருமும்போது, தும்மும்போதுகூட முதுகுவலி அதிகரிக்கலாம். சிலருக்கோ குறுகிய தூரம் நடப்பது, சிறிது நேரம் அமர்வதுகூட கடினமாக இருக்கும். தண்டுவடத்தில் ஏற்படும் அதிகப்படியான பாதிப்பால் சிலருக்கு கூன் விழலாம். சிலரால் தன் சொந்த வேலைகளைக்கூட செய்யமுடியாமல் போகலாம். சிலருக்கு இயக்கம் முற்றிலும் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக நேரிடலாம். இப்படி முதுகுவலி பலவித உடல் பிரச்னைகள் மட்டுமின்றி, மனம் சார்ந்த பிரச்னைகள்வரை ஏற்படுத்தலாம். எனவே, இதை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டியது அவசியம். மருத்துவ ஆலோசனை இல்லாமல் தானாக வலிநிவாரணி வாங்கிச் சாப்பிடுவது, பக்கவிளைவுகளோடு பிரச்னை அடுத்த கட்டத்துக்கு வளரவும் வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்க. 

  முதுகுவலி வந்தால் என்ன செய்ய வேண்டும்? 

  திடீரென முதுகுவலி வந்தால், அது அப்போதைய தற்காலிக செயலால் வந்த வலி என்று விட்டுவிடலாம். போதிய ஓய்வே அதற்கான சிகிச்சை. தேவையென்றால் தைலம் தடவிக்கொள்ளலாம். இரண்டு நாட்களில் வலி சரியாகிவிடும். அதற்கும் மேல் தொடர்ந்தால், அது சாதாரண வலி அல்ல என்பதை உணர்ந்து, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வலிக்கான காரணத்தை பரிசோதனைகள் மூலம் கண்டறிய வேண்டும். 

  என்னென்ன சோதனை முறைகள்?  

  அறிகுறிகள் ப்ளஸ் சோதனைகள்: பாதிக்கப் பட்டவர் சொல்லும் அறிகுறிகள் மற்றும் அவரை நடக்கச் சொல்வது, அமரச் சொல்வது, எழுந்து நிற்கச் சொல்வது மூலம் மருத்துவர் மேற்கொள்ளும் சோதனைகளின் அடிப்படையில், முதுகு வலிக்கான காரணத்தை 50% கண்டறியலாம். 

  எக்ஸ்ரே: எலும்புத் தேய்மானம், அடிபட்டிருப்பது, பலவீனம், புற்றுநோய் பாதிப்பு போன்றவற்றை எக்ஸ்ரேயின் மூலமாகக் கண்டறியலாம். 

  ரத்தப் பரிசோதனை: எலும்பு பலவீனம், எலும்புக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்துக் குறைபாடு, கிருமித் தொற்று, புற்றுநோய்  பாதிப்பு மற்றும் முதுகுவலிக்காக அளிக்கவிருக் கும் சிகிச்சையை ஏற்றுக்கொள்ள சம்பந்தப்பட்டவருக்கு போதிய உடல் தகுதி இருக்கிறதா... கல்லீரல், சிறுநீரகச் செயல்பாடுகள் சரிவர உள்ளதா... இவற்றை எல்லாம் ரத்தப் பரிசோதனையின் மூலமாகக் கண்டுபிடிக்கலாம். முதுகுவலிக்கான 50% - 80% காரணங்களை  எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனை மூலமாகக் கண்டுபிடித்துவிடலாம்.

  சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன்: எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மூலமாக கண்டுபிடிக்க இயலாத முதுகுவலிக் காரணங் களை, சிடி ஸ்கேன் மூலமாகவும், அதிலும் கண்டுபிடிக்க முடியாதபட்சத்தில் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலமாகவும் கண்டறியலாம். 

  முதுகுவலிக்கான சிகிச்சைகள்! 

  முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையைப் பொறுத்து மாத்திரைகள் தொடங்கி அறுவை சிகிச்சைவரை பலவிதமான சிகிச்சைகள் வழங்கப்படும். 

   முதலில், முதுகுவலிக்கான காரணம் கண்டறிந்து பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கை முறையில் செய்யவேண்டிய மாற்றங்களைப் பரிந்துரைப்போம். 80% பேருக்கு எந்தவித சிகிச்சையும் இல்லாமலே சரியாகிவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

   உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வலியுறுத்துவோம்; வேண்டிய மனநல ஆலோசனைகளை வழங்குவோம். 

   சாதாரண வலிநிவாரணிகள், இயன்முறை சிகிச்சைகளைப் பரிந்துரை செய்வோம். 

   பின்னர் ஆயுர்வேத மசாஜ் போன்றவற்றை வழங்குவோம். 

   அடுத்த நிலையாக, நவீன மருத்துவ முறைப்படி பாதிப்பு உள்ள இடத்தில் ஊசி மூலமாக மருந்துகள் செலுத்துவோம் (Nerve Root Block). கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு ஊசியின் மூலமாக ஒட்டுமொத்த வலியையும் போக்க இயலும் இந்த சிகிச்சைக்கு, இப்போது பலரும் முன்வருகிறார்கள். இதன் மூலம் 99% பேரின் பிரச்னைகள் சரிசெய்யப்படும்.

   மீதமுள்ள 1% பேருக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக அமையும். 

  யார் அந்த 1% பேர்? 

  நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு, மற்ற சிகிச்சை களால் குணம் காண இயலாதவர்களுக்கு, பிறவிக்கோளாறு காரணமாக வலி நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருப்பவர்களுக்கு, தினசரி இயக்கங்கள் குறைந்து சரிபடுத்தக்கூடிய கட்டத்தை கடந்தவர்களுக்கு... இவர்களுக்கு எல்லாம் அறுவை சிகிச்சைதான் வழி. இன்று அறுவை சிகிச்சை கட்டத்தில் வந்து நிற்கும் பலரும், பிரச்னையின் வீரியம் முற்றிய பிறகோ, அல்லது வேறு பல சிகிச்சைகள் எடுத்து சரிசெய்யாமல் வளரவிட்டவர்களாகவோதான் இருக்கிறார்கள். 

  முதுகுவலி... வராமல் தடுக்க!

   திடீரென அதிக பளு தூக்குவது கூடாது.

   போதிய ஓய்வு இல்லாமல் தொடர்ந்து அதிக வேலை செய்வது கூடாது.
   நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது கூடாது.

   தவறான முறையில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவது கூடாது.

   இன்றைக்கு முதுகுவலியால் அவதிப்படுவோரில் அதிகமானோர் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர் களே. எனவே, கணினியில் வேலை பார்ப்பவர்கள் சரியான பொசிஷனில் அமரவேண்டியது முக்கியம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு நிமிடமாவது உடலுக்கு அசைவு கொடுக்க வேண்டும்.

   இரண்டு, நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது அதிக நேரம் நேராக 90 டிகிரியில் அமர்வது கூடாது.
   குழந்தைகள் அதிக சுமைகொண்ட புத்தகப்பை தூக்குவதைத் தவிர்ப்பது நல்லது.  

   தினமும் குறைந்தது 20 நிமிடம் உடற்பயிற்சி/நடைப்பயிற்சி (வீட்டு வேலைகளே பயிற்சியாக அமைந்தாலும் சரி). 

   யோகா, வாரத்தில் இரண்டு நாட்கள் குறைந்தது 40 நிமிட நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம்.
   தினசரி உடல் இயக்கத்தில் இருந்து படுக்கை, தூக்கம் வரை முதுகு தண்டுவடத்துக்கு எந்தவித தொந்தரவோ, பாதிப்பு இல்லாத வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். 

   உயரத்துக்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உடல் எடை = உயரம் (செ.மீட்டரில்) - 100. 

   காய்கறிகள், பால், பழங்கள் என சத்தான உணவுடன், ஆரோக்கியம் மிகுந்த கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளையும், சிறுதானிய உணவுகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது. கால்சியம் சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து என ஏதாவது ஒரு சத்தே கிடைக்கும்படி தொடர்ச்சியாக ஒரே வகை உணவாகச் சாப்பிடாமல், எந்த உணவையும் ஒதுக்காத சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது நல்லது.
   மொத்தத்தில், எந்தவொரு வலியும் தானாக வருவதில்லை. நாம்தான் அதை வரவழைக்கிறோம். அதற்கு முதுகுவலி சரியான உதாரணம். எனவே, இனி கூடுதல் கவனத்தோடும், அக்கறையோடும் இருந்தால் முதுகுவலியை ஆரம்பத்திலேயே சரிசெய்வது மட்டும் அல்ல.. வரவிடாமலேயே தடுக்கலாம்!’’

 • You might also like

  4 comments:

  1. This blog is having the general information. Got a creative work and this is very different one.We have to develop our creativity mind.This blog helps for this. Thank you for this blog. This is very interesting and useful.

   Informatica Training in Chennai

   ReplyDelete
  2. Great Article… I love to read your articles because your writing style is too good, its is very very helpful for all of us and I never get bored while reading your article because, they are becomes a more and more interesting from the starting lines until the end.

   AWS Training in Chennai

   ReplyDelete
  3. This blog is having the general information. Got a creative work and this is very different one.We have to develop our creativity mind.This blog helps for this. Thank you for this blog. This is very interesting and useful.

   Fresher Jobs in Mumbai
   Fresher Jobs in Pune
   Fresher Jobs in Noida
   Fresher Jobs in Hyderabad

   ReplyDelete
  4. We can learn a lot about Why Deep Learning Works by studying the properties of the layer weight matrices of pre-trained neural networks. And, hopefully, by doing this, we can get some insight into what a well trained DNN looks like–even without peaking at the training data.
   MACHINE LEARNING training in chennai

   ReplyDelete

Our Portfolio

Search This Blog

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate