• HAIR LOSS



    ஆண்களே! உங்களுக்கு முடி கொட்டுதா? அதைத் தடுக்க இத ஃபாலோ பண்ணுங்க.

    வைட்டமின் எச் குறைபாடு உடலில் வைட்டமின் எச் என்னும் பயோடின் குறைபாடு ஏற்பட்டால், முடி உதிர ஆரம்பிப்பதோடு, நகங்களும் வலிமையிழந்து உடைய ஆரம்பிக்கும். எனவே பயோடின் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான முட்டை, வேர்க்கடலை, தயிர், ஆட்டு ஈரல், சால்மன் மீன், சீஸ் போன்றவற்றை அதிகம் உட்கொண்டு வாருங்கள்.

    புரோட்டீன் உடலில் புரோட்டீன் குறைவாக இருந்தால், அதனாலும் முடி கொட்டும். எனவே புரோட்டீன் உணவுகளான பருப்பு வகைகள், மட்டன், சிக்கன், சோயா, பால் மற்றும் முட்டையை உணவில் அன்றாடம் சேர்த்து வாருங்கள்.

    ஆயில் மசாஜ் வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை கொண்டு நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளித்து வந்தால், மயிர்கால்கள் புத்துணர்ச்சி அடைவதோடு, புதிய மயிர்கால்களும் வளர தூண்டப்படும்

    முட்டை மற்றும் தயிர் பேக் 1/2 கப் தயிரில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்வதால், முடி கொட்டுவது குறைவதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

    வெங்காய சாறு 2-3 வெங்காயத்தை எடுத்து, நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, 1 மணிநேரம் ஊற வைத்து, நீரை வடித்து, குளிர வைத்து, பின் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு அலசினால், முடி உதிர்வது குறையும்.



    பூண்டு பேஸ்ட் பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, வழுக்கை விழும் இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, அவ்விடத்தில் முடி வளர ஆரம்பிக்கும்.

    க்ரீன் டீ க்ரீன் டீ தயாரித்து, அதனை குளிர வைத்து, ஸ்கால்ப்பில் படும் படி தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலசினால், முடி கொட்டும் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
  • You might also like

    No comments:

    Post a Comment

Our Portfolio

Search This Blog

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate