• பிக் பில்லியன் டே: கவனிக்க 5 விஷயங்கள்..!


  பொருட்களை வாங்கும் முன்

  கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்:


  இந்தியாவின் இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ஃப்ளிப்கார்ட் தனது ஆஃபர்களை அள்ளி வழங்கிய வண்ணம் இருக்கிறது. இதில் வித்தியாசமான உத்திகளை கையாண்டுள்ளது ஃப்ளிப்கார்ட் இந்த நாளில் (அக்டோபர் 6, 2014) பில்லியன் விற்பனையை அடைந்தே தீருவேன் என்ற நோக்கில் விற்று தீர்ப்பதற்காக நான்கு ஆஃபர்களை வழங்கியுள்ளது.

  குறைந்த நேரம் மட்டுமே உள்ள ஆஃபர்,

  குறைந்த அளவு மட்டுமே உள்ள ஆஃபர்,


  எதிர்பார்க்க முடியாத அளவுக்கு விலை குறைந்த ஆஃபர்,


  பணத்தை மிச்சப்படுத்தும் ஆஃபர்


  என நான்கு பெரிய ஆஃபர்களால் இணையதளவாசிகள் அனைவரையும் ஃப்ளிப்கார்ட்.காமில் கட்டி போட்டிருக்கிறது, இந்த ஆஃபர் மோதல்.


  இதில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை மதிப்புள்ள பொருட்களை, ஒரு ரூபாய்க்கு பொருட்களை விற்று ஆச்சர்யப்படுத்தியிருந்தது ஃப்ளிப்கார்ட். அதுமட்டுமின்றி இரட்டை இலக்க விலையில் தவிர்க்க முடியாத பொருட்களை வைத்து விற்ற ஃப்ளிப்கார்ட் சற்று நேரத்தில் விற்றுத் தீர்ந்தது என கடையை மூடியது.இன்று இந்த ஆஃபரில் எந்த பொருளை வாங்கினால் லாபம் பார்க்க முடியும் என்று ஒருவரை ஒருவர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்.  தற்போது கடைகளில் உள்ள விலையையும் இங்குள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து வாங்கும் போது என்ன பொருட்களை வாங்கலாம். அப்படி வாங்கினால் நமக்கு என்ன லாபம் என கணக்கு போட துவங்குபவர்களுக்கு நீங்கள் பொருளை வாங்கும் முன் கட்டாயம் கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்:


  1.நீங்கள் வாங்கும் பொருளின் விலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன் என்ன விலையில் இருந்துள்ளது என ஒப்பிட்டு பாருங்கள். இதேவிலைதான் என்றால், இன்னமும் விலை குறையும் என்பதால் அவசரப்பட்டு வாங்காமல் சற்று யோசித்து பிறகு வாங்கலாம்.


  2.இன்றைய ரீடெயில் விலையை ஒப்பிட்டு பாருங்கள் அதிலிருந்து எவ்வளவு வேறுபட்டுள்ளது என்பதையும் பாருங்கள். அதற்கும் நீங்கள் வாங்கும் பொருளுக்கும் குறைந்தபட்சம் 35% விலை தள்ளுபடி இருந்தால் நீங்கள் வாங்குவதில் லாபம் இருக்கும். ஏனேனில் தற்போது பண்டிகை தினம் என்பதால் ரீடெயில் கடைகளிலேயே 20 முதல் 25 சதவிகிதம் தள்ளுபடி உள்ளது.


  3.ஆஃபரில் தருகிறார்கள் என்று தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். உங்களுக்கு தேவைப்படுவதை மட்டும் தேர்வு செய்யுங்கள். நீங்கள் மொத்தமாக வாங்கிய பொருளில் உள்ல ஆஃபரை அடுத்த பொருளை வாங்கி வீணடித்துவிடாமல் பார்த்து கொள்ளுங்கள்.


  4.இந்த பில்லியன் தினத்தில் அவசரப்பட்டு சில பொருட்களை ஆர்டர் செய்கிறோம். அதன் ரிவியூ மதிப்பும் அதிகமாக உள்ளது என்று நீங்கள் நம்புவது தவறு. அனைத்து விற்பனையாளர்களுமே தங்களை பொருளை அதிகமாக தான் பிரபலப்படுத்துவார்கள். அதனால் உங்கள் நணபர் அல்லது உறவினர்களிடம் இந்த பொருளை வாங்கிய அனுபவம் பற்றி விசாரித்து வாங்குங்கள்.


  5. ஒருவேளை ஒரு பொருளை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் அப்போதே வாங்கிவிடுங்குகள். ஒரு மணி நேரம் கழித்து வாங்கினால் அதன் விலை அதிகரித்துவிடும். காரணம் ப்ளிப்கார்ட் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை விலையை மாற்றியமைக்கிறது.


  இந்த ஐந்து விஷயங்களை சரியாக பார்த்து வாங்கினால் உங்கள் பணம் மிச்சப்படும் வாய்ப்புள்ளது. இல்லை எனில் இதற்கு நேரடியாக சென்றே வாங்கியிருக்கலாமே என்று நீங்கள் யோசிக்கும் நிலையை தவிர்க்கலாம்!
  இன்று நீங்கள இந்த விஷயங்களை தவறவிட்டிருந்தால் அமேசான் வரும் 10ம் தேதி துவங்கும் ஆஃபரிலாவது விழிப்போடு செயல்பட்டு பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

  ச.ஸ்ரீராம்
 • You might also like

  No comments:

  Post a Comment

Our Portfolio

Search This Blog

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate