• YOGASANAM

  நோய்கள் யோகாசனங்கள் மூலம் குணமாகும் :-
  ++++++++++++++++++++++++++++++++++++++++

  யோகாசனம் இந்தியாவில் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. யோகாசனங்களை, உலக மக்களுக்கு இந்தியாவின் கொடையாகக் கருதலாம்.

  ஏனெனில் யோகாசனங்களை முறையாகச் செய்து வந்தால், உடல் தசைகளும், எலும்புகளும் இலகுவாகி, நுரையீரல் அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்வதோடு, உடலில் ரத்த ஓட்டம் சீராகி, அனைத்து சுரப்பிகளும் நன்றாகத் தூண்டப்பட்டு, உடலும் உள்ளமும் ஒரு அற்புதமான பரிபூரண நிலையை அடையும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

  இப்போது வெளிநாட்டினரும் யோகாசனங்களை ஆர்வமுடன் கற்றுப் பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளனர். அதனால் வெளிநாட்டில் யோகாசனங்களைக் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு நிறைய வரவேற்பு உள்ளது. யோகாசனங்கள் ஏறத்தாழ அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

  அத்தகைய யோகாசனப் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், எவ்வகையான நோயும் அணுகாது. அதிலும் குறிப்பிட்ட சில நோய்களை, குறிப்பிட்ட சில ஆசனங்கள் குணப்படுத்து கின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. யோகாசனங்களைத் தவறாது செய்து வந்தால், ஆஸ்துமா, ஆர்த்ரிடிஸ் போன்ற வியாதிகளும் குணமாகும்.

  நீரிழிவு நோயை எந்த மருத்துவத்தினாலும் குணப்படுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய நீரிழிவு நோயை யோகாசனம் கூட குணப்படுத்தாது என்றாலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டுடன் வைக்கச் செய்யும் வல்லமை உள்ளது. இங்கு யோகாசனங்களின் மூலம் தீர்க்கப்படும் 10 கொடிய நோய்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, தினமும் யோகாசனம் செய்து, அந்த நோய்களில் இருந்து விலகி இருங்கள்.

  1.ஆஸ்துமா :

  ஆஸ்துமாவுக்கு யோகாசனம் சிறந்த மருந்து. ஆஸ்துமா தாக்கும் போது இன்ஹேலர்களைப் பயன்படுத்தி உயிரைக் காத்துக் கொள்ளலாம். இருப்பினும் அது தற்காலிகத் தீர்வாகத் தான் இருக்கும். ஆனால் ஆஸ்துமாவிற்கு நிரந்தரமான தீர்வு காண `பிராணயாமா' என்னும் ஆசனத்தை செய்வதன் மூலம் நல்ல பலன் கிட்டும்.

  2.நீரிழிவு :

  நீரிழிவுக்கு மருத்துவமே இல்லை. ஆனால், `பச்சிமோத்தாசனம்` என்னும் ஆசனத்தின் உதவியுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க முடியும்.

  3.உயர் ரத்த அழுத்தம் :

  உயர் ரத்த அழுத்தம் ஏற்பட ஏராளமான காரணங்கள் உள்ளன. இந்நோயை `வீராசனம்` என்னும் ஆசனத்தின் பயிற்சிகள் மற்றும் தியானம் மூலமாக மட்டுமே குணப்படுத்த முடியும்.

  4.செரிமான மின்மை :

  செரிமானமின்மை என்பது சாதாரண நோய் மட்டுமல்ல. பணிபுரியும் மக்களிடையே பரவி வரும் ஒரு தொற்றுநோயும் ஆகும். ஆனாலும், ஒரு சில யோகாசனப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இதனைக் குணப் படுத்தலாம்.

  5.ஒற்றைத் தலைவலி :

  மூளைக்கு போதுமான ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தினால், ஒற்றைத் தலை வலி ஏற்படுகிறது. அதற்கு `சிரசாசனம்` போன்ற யோகாசனங்களைச் செய்து வந்தால், ஒற்றைத் தலை வலியைக் குணப் படுத்தலாம்.

  6.கீழ்முதுகு வலி :

  அலுவலகப்பணி புரிபவர்களுக்கிடையே தற்போது பரவி வரும் ஒரு கொடிய நோயாக, கீழ்முதுகு வலி விளங்குகிறது. மேலும் ஒருசில குறிப்பிட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் இவ்வலி உண்டாகிறது. இதற்கு `தடாசனம்` போன்ற சில ஆசனங்களைச் செய்து வந்தால் குணப்படுத்தலாம்.

  7.மூட்டுவலி :

  ஆர்த்ரிடிஸ் எனப்படும் எலும்பு மூட்டுகளில் ஏற்படும் நோயானது, மூட்டுகளில் மிகுந்த வலியை தரும். இது துரதிர்ஷ்டவசமாக தீர்க்க முடியாத நோயாக விளங்குகிறது. எனவே ஆர்த்ரிடிஸ் நோயால் உண்டாகும் வலியைக் கட்டுப்படுத்த, ஆசனங்களை தினமும் மேற்கொள்வதே சிறந்தது.

  8.இதயப் பிரச்சனைகள் :

  இதயத்தினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, வயிற்றில் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்த உதவும் சில அடிப்படையான யோகாசனங்களை செய்து வந்தால், இதயப் பிரச்சினைகளில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.

  9.மனத்தளர்ச்சி :

  மனத்தளர்ச்சிக்கு மிகவும் சிறப்பான மருந்து என்றால் அது யோகாசனம் தான். தூக்க மாத்திரை போன்ற மனத்தளர்ச்சிக்கு எதிரான மருந்துகளைத் தவிர்க்க விரும்பினால், தினமும் ஆசனங்களைப் பயிற்சி செய்து வந்தால், தூக்க மாத்திரை இல்லாமல் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

  10.பி.சி.ஓ.எஸ். :

  குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களுக்கு தற்போது பொதுவாகக் காணப்படும் பிரச்சனை தான் பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் எனப்படும் சினைப்பைக் கட்டிகள். இது ஒரு ஹார்மோன் சம்பந்தமான குறைபாடு ஆகும்.

  இந்நாட்களில் இளம் பெண்களைத் தாக்கும் பிளேக் போன்ற கொடிய நோய் இதுவாகும். சீரற்ற மாத விலக்கு, இந்நோயின் அறி குறிகளில் ஒன்றாகும். இது மலட்டுத்தன்மைக்கும் வழி வகுக்கும். இந்நோயைக் கூட முறையான யோகாசனங்களால் குணப்படுத்த முடியும்.

  எந்திர வாழ்க்கை முறை, ஓய்வற்ற உழைப்பு, இடைவிடாத பணிச்சுமை, முறையற்ற உணவு, மன இறுக்கம் போன்ற காலச் சூழ்நிலையில் பயணிக்கும் நமக்கு யோகா சனம் என்பது கடவுள் அருளிய வரம். மேற்கண்ட பட்டியலில் கூறப்பட்டவை போக, இன்னும் எண்ணற்ற நோய்களை தடுக்கும் அபூர்வ சக்தி யோகா என்ற இரண்டெழுத்துக்கு உண்டு.

  இதனை கற்றுக்கொடுக்ககவும், எளிமையான பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளவும் இன்று எண்ணற்ற பள்ளிகள் வந்துவிட்டன. சாப்பிடுதல், தூங்குதல், விளையாடுதல், படித்தல், பாடுதல் போன்று இந்த யோகாசனத்தையும் ஒரு பகுதியாக கொண்டு நாம் செயல்பட்டால் நோயற்ற வாழ்வு வாழலாம்.
 • You might also like

  No comments:

  Post a Comment

Our Portfolio

Search This Blog

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate