• ஹாலிவுட் அவதார் ஜேம்ஸ் கேமரூன்!
  யாராவது கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து இருந்தால் ''என்ன கப்பலா கவிழ்ந்துவிட்டது?'' என்று கேட்பார்கள். அப்படி கவிழ்ந்த கப்பலால் தான் ஒருவர் உலகிற்கு தன் திறமையை அடையாளம் காட்டினார் என்றால் நம்புவீர்களா? கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் கதையை படமாக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆஸ்கர் வெண்ரது இந்த படத்துக்கு தான்! இந்த சாதனையாளரின் வாழ்க்கையும் டைட்டானிக் கதையை போன்று போராட்டங்கள் நிறைந்ததுதான்!

  கனடாவின் ஒன்டாரியோவில் 1954ம் ஆண்டு பிறந்தவர் கேமரூன். சிறு வயதில் தன் குடும்பம் கலிஃபோர்னியாவுக்கு இடம் மாறியதால் அங்கு பள்ளிப்படிப்பை ஆரம்பித்தார். இடையில் படிப்பில் நாட்டமின்றி பாதியிலேயே படிப்பை நிறுத்தி பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். மீண்டும் பெற்றோரின் வற்புறுத்தலால் பள்ளிக்கு சென்ற கேமரூன். அங்கும் சுமாராகவே படித்து வந்தார். கல்லூரிக்கு சென்ற கேமரூன் தனக்கு சுத்தமாக தொடர்பே இல்லாத துறையான இயற்பியலை எடுத்து படிக்க துவங்கினார். ஆனாலும் முதல் செமஸ்டர் முடிவதற்குள்ளாகவே கல்லூரியில் இருந்து பாதியிலேயே நின்றுவிட்டார்.  கேமரூனை பார்த்தவர்கள் எதையுமே படிக்க லாயக்கற்றவன் நீ? பிற்காலத்தில் என்ன செய்துதான் பிழைக்க போகிறாயோ? என்று கேட்க தொடங்கினார்கள். பல வேலைகளை தேடி அலைந்தார். கடைசியாக ட்ரக் ஓட்டுனராக தன் வேலையை துவங்கினார். இடையிடையே கதைகளை எழுத துவங்கினார்.அப்போதும் இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.1977ம் ஆண்டு வெளியான ஸ்டார் வார்ஸ் படத்தை பார்த்த பின்னர் இவருக்கு சினிமா ஆர்வம் பற்றிக் கொண்டது. இவர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி செல்கையில். ஒழுங்காக படிப்பு வரவில்லை கிடைத்த வேலையையும் சினிமாவுக்காக விட்டு விட்டாயே என்றனர்.

  தான் எழுதிய ஒரு க்செனோஜெனெஸிஸ் என்ற கதையை 35 எம்.எம் படமாக படமாக்கினார்.அத்னால் வந்த வருமானத்தில் கேமரா, லென்ஸ் போன்ரவற்றை விலைக்கு வாங்கி தன் சினிமா எடுக்கும் வேலையை துவங்கினார். ஏலியன், டெர்மினேட்டர் வரிசை படங்களை எடுத்த இவருக்கு பெரிய அங்கிகாரத்தை வழங்கியது. 1997ம் ஆண்டில் இவர் எடுத்த உண்மை கதையான டைட்டானிக் இது சினிமாத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வாங்கி தந்தது.இன்று காதலிக்கும் ஒவ்வொருவரையும் ஜாக்,ரோஸாக நினைக்க வைத்த பெருமை கேமரூனையே சாரும்.

  இப்படி பல தடைகளை தாண்டி சினிமாவில் சாதித்த கேமரூன் ஓய்வதாய் இல்லை! அவதார் எனும் பர்பாமென்ஸ் கேப்சர் படத்தை எடுத்து ஹாலிவுட்டில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார். இன்று நாம் பார்க்கும் கோச்சடையான் போன்ற தொழில்நுட்பத்துக்கு இன்ஸ்பரேஷனாக இருப்பவர் கேமரூன் தான்! மூழ்கிய டைட்டானிக் கப்பலையே கண் முன் நிறுத்தியவரது வாழ்க்கை தோல்வியையே சந்திப்பவருக்கு நிஜமாகவே ரைட்''டானிக்'' தான்!! இந்த புகழுக்கெல்லாம் சொந்தக்காரரான கேமரூனின் பிறந்த நாள் இன்று!!
 • You might also like

  No comments:

  Post a Comment

Our Portfolio

Search This Blog

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate