• BUDGET HOUSE SOME TIPES

    பட்ஜெட் வீடு கட்டுபவர்கள்தான் அதிகம். ஏனெனில் தனது சம்பாத்தியத்துக்கு ஏற்ற வகையில் சிறிய சிக்கனமான வீட்டின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, வீடு கட்டுமான பணியில் எந்தெந்த வகையில் சிக்கனம் பிடிக்கலாம் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. மர வேலைப்பாடுகள்தான் கட்டுமான பணியில் பெரிய செலவாக இருக்கும். சிலர் வாசல் கதவு வைப்பதற்கே பல லட்சம் செலவு செய்கிறார்கள். வாசல் கதவு நன்றாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் அதிக வேலைப்பாடு இல்லாமல் இருந்தாலே செலவு குறையும். அதுபோல் அலுமினிய ஜன்னல்கள், மரம் போன்ற தோற்றத்தை தரும் ஸ்டீல் கதவுகள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

    இதனால் செலவு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்புதான். பரண் அமைக்கக்கூடிய இடத்திலேயே வெளிப்புறத்தில் அதன் தொடர்ச்சியாக சன்ஷேடு அமைத்தால் கொஞ்சம் பணமாவது மிச்சப்படும். மணல் விலை தாறுமாறாக இருக்கிறதே என கவலைப்படுபவர்கள் செயற்கை மணலை பயன்படுத்தலாம். இது மேனுபேக்சரிங் சேண்ட் அல்லது எம்.சேண்ட் எனவும் அழைக்கப்படுகிறது. பாறைகளை இயந்திரங்கள் மூலம் உடைத்து அதில் இருந்து தயாரிக்கப்படும் மணல் எம்.சேண்ட் எனப்படுகிறது. கோவை மாவட்டத்தில் செட்டிப்பாளையம், பொள்ளாச்சி, சிறுமுகை, காரமடை, உடுமலை போன்ற இடங்களில் இந்த ஆற்று மணல் தயாரிக்கப்படுகிறது. ஆனால் ஆற்றுமணல் போன்று இல்லாமல் கருப்பு நிறத்தில் இருக்கும். இருந்தாலும், கட்டிடங்களுக்கு தாராளமாக பயன்படுத்தலாம் என்று கட்டுமான பணி நிபுணர்கள் உறுதியாக கூறுகிறார்கள். 

    இந்த செயற்கை மணல் ஆற்று மணலை விட விலை மிகவும் குறைவாக இருப்பதால் கட்டுமான செலவு அபரிமிதமாக குறையும் என்பதில் சந்தேகமே இல்லை என்று கட்டுமான பணிகளில் அனுபவம் உள்ள சிலர் கூறுகின்றனர். சென்ட்ரிங் போடும்போது ஸ்டீல் தகடுகளை வைத்து போட்டால் சிமெண்ட் பூசுவதை குறைக்கலாம் இதிலும் செலவு மிச்சப்படும்.வெளிச்சுவரை கனமாக அமைக்கலாம். அதேநேரத்தில், இரண்டு அறைகளுக்கு இடையில் கட்டப்படும் தடுப்பு சுவரை கனம் குறைவாக அமைத்தாலும் சிக்கனம்தான். அஸ்திவாரத்தில் ஆரம்பித்து, ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து செய்யுங்கள். பெயிண்ட் அடிப்பதிலும் சிக்கனம் செய்யலாம். எனவே, ஒவ்வொன்றையும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு திட்டமிடுங்கள். சிறந்த கட்டுமான வல்லுனரையும், ஏற்கனவே வீடுகட்டியவர்களையும் சந்தித்து யோசனை கேளுங்கள். அனுபவம் பெற்றவர்களிடம் யோசனை கேட்க தயங்காதீர்கள். சிக்கனமாக கட்டுங்கள் சிறப்பாக வாழுங்கள்.
  • You might also like

    No comments:

    Post a Comment

Our Portfolio

Search This Blog

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate