• TAMIL






    தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247,


    இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது



    இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

    அ -----> எட்டு
    ஆ -----> பசு
    ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
    உ -----> சிவன்
    ஊ -----> தசை, இறைச்சி
    ஏ -----> அம்பு
    ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
    ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
    கா -----> சோலை, காத்தல்
    கூ -----> பூமி, கூவுதல்
    கை -----> கரம், உறுப்பு
    கோ -----> அரசன், தலைவன், இறைவன்
    சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
    சீ -----> இகழ்ச்சி, திருமகள்
    சே -----> எருது, அழிஞ்சில் மரம்
    சோ -----> மதில்
    தா -----> கொடு, கேட்பது
    தீ -----> நெருப்பு
    து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
    தூ -----> வெண்மை, தூய்மை
    தே -----> நாயகன், தெய்வம்
    தை -----> மாதம்
    நா -----> நாக்கு
    நீ -----> நின்னை
    நே -----> அன்பு, நேயம்
    நை -----> வருந்து, நைதல்
    நொ -----> நொண்டி, துன்பம்
    நோ -----> நோவு, வருத்தம்
    நௌ -----> மரக்கலம்
    பா -----> பாட்டு, நிழல், அழகு
    பூ -----> மலர்
    பே -----> மேகம், நுரை, அழகு
    பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
    போ -----> செல்
    மா -----> மாமரம், பெரிய, விலங்கு
    மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
    மு -----> மூப்பு
    மூ -----> மூன்று
    மே -----> மேன்மை, மேல்
    மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
    மோ -----> முகர்தல், மோதல்
    யா -----> அகலம், மரம்
    வா -----> அழைத்தல்
    வீ -----> பறவை, பூ, அழகு
    வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
    வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த
  • You might also like

    No comments:

    Post a Comment

Our Portfolio

Search This Blog

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate