• HOME MADE TIPES





    பாத்ரூம் டப்: கிரேப் ஃபுரூட் பாத்ரூம் டப் மற்றும் சின்க்கில் உள்ள கறைகளைப் போக்க கிரேப் ஃபுரூட்டை உப்பில் தொட்டு, தேய்த்து கழுவ வேண்டும்.

    துருப்பிடித்த பொருட்கள்: உருளைக்கிழங்கு இரும்பு பொருட்களில் துருப்பிடித்திருந்தால், அதனை நீக்க உருளைக்கிழங்கை கொண்டு தேய்த்தால், விரைவில் போய்விடும்.

    பாத்திரங்கள்: காபித் தூள் வாணலியில் உள்ள கருமையை எந்த ஒரு கீறல்கள் இல்லாமலும் போக்க வேண்டுமானால், காபித் தூளைப் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.

    ஜன்னல்கள்: வெங்காயம் ஜன்னல்களை வெங்காயத்தைக் கொண்டு துடைத்து எடுத்தால், ஜன்னல்களில் உள்ள எண்ணெய் பசை போன்ற தூசிகள் மற்றும் கறைகள் நீங்கிவிடும்.

    பாத்திரம் கழுவும் தொட்டி: எலுமிச்சை பாத்திரம் கழுவும் தொட்டியில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, தொட்டி பளிச்சென்று இருக்க வேண்டுமானால், எலுமிச்சையைக் கொண்டு தேய்க்க வேண்டும்.

    மரப்பொருட்கள்: டீ டீயில் உள்ள டானின் என்ற பொருள் மரப்பொருட்களை பளிச்சென்று மின்னச் செய்யும். எனவே மரப்பொருட்களை டீ கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

    பிரியாணி இலை வீட்டில் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாவிட்டால், பிரியாணி இலையை பூச்சி வரும் இடத்தில் வைத்தால், பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.

    கப்: வினிகர் கப்களில் உள்ள நீங்கா கறைகளை போக்க, வெள்ளை வினிகர் கொண்டு தேய்த்தால், கப்களில் உள்ள செராமிக் போகாமல், கறைகள் மட்டும் நீங்கும்


    ஃபிரிட்ஜ்: க்ரீன் டீ ஃபிரிட்ஜில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க, க்ரீன் டீயின் இலைகளை ஒரு பௌலில் போட்டு, அதனை ஃபிரிட்ஜில் வைத்தால், துர்நாற்றம் போய்விடும்.

    சில்வர் பொருட்கள்: வாழைப்பழ தோல் சில்வர் பொருட்களை வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதனைக் கொண்டு பாத்திரத்தை தேய்த்து கழுவினால், பாத்திரங்கள் மின்னும்.

    டாய்லெட்: வோட்கா டாய்லெட்டுகளை வோட்கா கொண்டு தேய்த்து கழுவினால், டாய்லெட்டில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.


    ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்: வெள்ளரிக்காய் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களை வெள்ளரிக்காய் கொண்டு தேய்த்தால், அந்த பாத்திரங்கள் பொலிவோடு மின்னும்.


  • You might also like

    No comments:

    Post a Comment

Our Portfolio

Search This Blog

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate