• HOW TO SATISFY WIFE? SOME TIPES OR PROBLEM?  மனைவியின் அபிமானத்தை பெற..(மனைவியை மயக்க - என்றால் சிலர் கோபித்து கொள்வார்கள்)

  1.வீடு திரும்பும்போது ஒரு பஜ்ஜியாவது வாங்கி செல்லுங்கள் மக்களே! பாதிநாள் 'செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!' என்ன சரியா? இருந்தாலும் பழக்கத்த விட்டுடாதீங்க.

  2. காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க!
  சும்மா ஒரு காபி போட்டு பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க.
  லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு ஆம்லெட் போட்டு குடுங்க. (ஏற்கனவே இத தான் செஞ்சிட்டு இருக்கேன்னு சொல்றவங்க skip this point)


  3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்ததுணி,பெட்ஷீட்ன்னு ஒரு மலை போல குவிச்சி வைப்பாங்க..
  கோவப்படாம தூங்கப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம்
  அடுக்கி வைத்து விடுங்கள் நல்ல பிள்ளையாக...!

  4. இரவு சாப்பிட்ட ப்ளேட் எல்லாம் அசதியில்
  அப்படியே போட்டு வைத்து (காலையில் கழுவிக்கலாம்னு) தூங்கிவிடுவார்கள் . நாம் தான் ஃபேஸ்புக்க நைட் 12 மணி வரைக்கும் நோண்டிட்டு கடைசியா படுப்போமே....
  எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வச்சிட்டா, காலை நிம்மதியாக விடியும்.

  5.மனைவின்னாலே பல சமயம் குண்டுன்னு அர்த்தம்! (இத வச்சே நிறைய தாய்குலம் சண்டைக்கு வருவாங்க பாருங்க..அவங்களுக்கு.... "சும்மா ஒரு உதாரணத்துக்கு தானே...?) அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது! அப்படிப்பண்ணும் போது அது நக்கலில்
  போய் முடியும். அப்புறம் விளைவுகளுக்கு நான் பொறுப்பள்ள.
  அப்படியில்லாமல் 'இந்த சேலையில நீ குண்டாவே தெரியல, சிக்குனு இருக்கு..! ' 'அந்த காம்பாக்ட் பவுடர் போட்டா கண் கருவளையம்
  தெரியவே இல்லை' - இப்படிச் சொல்லணும்!

  6. ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டுஅவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்து
  கொண்டு பார்க்கவும்..

  7. வீட்டு நாயைப் புடிச்சு தண்ணி ஊத்துங்க. நாய் இல்லன்னா ஒரு பேய புடிச்சாவது ஊத்துங்க... அம்மிணி வண்டியை துடைத்து பளபளப்பாகி கிளம்பறதுக்கு ரெடியா வையுங்க.

  8. வீட்டில் ஆணி அடிக்கணுமா?ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.

  9. அடுப்படி சாமானை நோட்டமிடுங்க. காலியாகும் நிலையில் உள்ள
  வெல்லம், சீனி, காபித்துள் அயிட்டங்களை வாங்கி ஆச்சரியப்படுத்துங்க. கூடவே அவங்களுக்கு பிடித்த சமோசா, பப்ஸ்
  ஏதாவது!!

  10. ஞாயிறு போன்ற விடுமுறையில் சரவண பவன், ஆர்ய பவன்னு, அஞ்சப்பர்ன்னு அப்படியே ஒரு சுத்து.
  நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!

  இன்னும் இருக்கு, டைம் கிடைக்கும் போது மீதியை சொல்றேன்.....
 • You might also like

  No comments:

  Post a Comment

Our Portfolio

Search This Blog

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate